மும்பை: இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இஷா அரோரா தாம் முதலில் வேட்டையாடப்பட்ட நாளை இன்னும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். தேசிய தலைநகர் பிராந்தியத்தியமான டெல்லி காஜியாபாத்தில், அப்போது அவருக்கு வயது 13, எட்டாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிற்கு அருகே, வெளிநாட்டு மொழி கற்கும் வகுப்புக்கு செல்லும் வழியில் இது நடந்தது. ஒரு நபர் அச்சிறுமியிய தடுத்து நிறுத்தி, பல மாதங்களாக அவளை பின்தொடர்ந்து வருவதாகவும், அவளை தீவிரமாக “காதலிப்பதாகவும்” கூறினான்.

"நான் எங்கு தங்கியிருக்கிறேன், நான் செல்லும் பள்ளி, நான் எந்த நேரத்திற்கு டியூஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்பது தமக்கு நன்றாக தெரியும் என்று அந்த நபர் என்னிடம் கூறினார்" என்று இந்தியா ஸ்பெண்டிற்கு தொலைபேசியில் அரோரா தெரிவித்தார். "நான் வழக்கமாக என் சகோதரனுடன் செல்வேன் என்று அவருக்குத் தெரியும், ஆனால் அன்று தனியாக இருந்ததால் நடுங்க ஆரம்பித்துவிட்டது” என்றார்.

அந்த நபர் அச்சிறுமியிடம் தனது மொபைல்போன் எண்ணை கொடுத்துவிட்டு, தொடர்ந்து தமக்கு போன் செய்யாவிட்டால் வீட்டு லேண்ட்லைனுக்கு அழைத்து அவளைத் துன்புறுத்தப்போவதாக மிரட்டினான். "நான் அதிர்ந்தேன், மணிக்கணக்கில் அழுதேன்," என்று சிறுமி கூறினார். "நான் என் தந்தையிடம் சொன்னேன்; அவர் என்னை தொடர்ந்து தொல்லை தந்தால் போலீசில் புகார் செய்வோம் என்று அந்த நபரை என் தந்தை எச்சரித்தார்". எச்சரிக்கையை தொடர்ந்து அரோராவை பின்வந்து தொல்லை கொடுப்பட்தை அந்த நபர் நிறுத்தினார்.

பெண்கள் மீதான இவ்வகை துன்புறுத்தல்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளன என, அரசு தரவுகள் காட்டின. 2018 ஜனவரியில், இந்தியாவில் 9,438 வழக்குகள் (சராசரியாக ஒவ்வொரு 55 நிமிடத்திற்கு ஒன்று) பதிவாகியுள்ளதாக தேசிய குற்றவியல் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) 2020 ஜனவரி அறிக்கை தெரிவிக்கிறது.

பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - அதாவது 2015இல் 6,266 வழக்குகள்; 2016 இல் 7,190 மற்றும் 2017 இல் 8,145 வழக்குகள். குற்ற விகிதமும் (100,000 பெண்களுக்கு பதிவான வழக்குகள்) அதிகரித்துள்ளன. இது 2014 இல் 0.8இல் இருந்து 2018 இல் 1.5 ஆக அதிகரித்தது.

பின்தொடருதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவான போதும், அவை குறைவாகவே தெரிவிக்கப்படுகிறன. டெல்லியில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்று மற்றும் மும்பையில் ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக காமன்வெத் மனித உரிமைகள் முயற்சி (சிஎச்ஆர்ஐ) 2015 இல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு சில தகவல்களே

ஆண்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பிய ஒருசில சிறுமிகளில் அரோராவும் ஒருவராக இருந்தார். பல சந்தர்ப்பங்களில், பின்தொடர்வது வன்முறையாகவும் ஆபத்தானதாகவும் மாறி விடுகிறது.

கடந்த 2020 ஜனவரியில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள கரகோணத்தில் உள்ள தனது வீட்டில் 19 வயது பெண், தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞரால் கொல்லப்பட்டார். அதே நாளில், கிழக்கு கொச்சியில் உள்ள கக்கநாட்டில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் 17 வயது சிறுமி பலமுறை கத்தி குத்துக்கு ஆளானார் என்று, தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம புத்தா நகரில், 15 வயதுடைய சிறுமியை, அவரை பின்தொடர்ந்து வந்த 20 வயது நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஒரு வருடம் முன்புதான், அந்த பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நின்றார்; அதற்கு காரணம் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"வழக்குக தொடர்வது குறித்து சில உணர்வுகள் உள்ளன - அவை சமூகத்திலோ அல்லது காவல்துறையினரோ தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்று, புதுடெல்லியை சேர்ந்த பெண்கள் உரிமைகளுக்கான ஆலோசக அமைப்பான சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறினார். “எனவே, பெண்கள் இது குறித்து புகாரளிப்பது எளிதானதல்ல. [புகாரளிப்பதில்] நிறைய தயக்கம் உள்ளது” என்றார்.

பாரம்பரியமான கலாச்சாரத்தில் இந்த உணர்வுகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன; குறிப்பாக காதல் உறவுகள் திரைப்படங்களில் பெரும்பாலும் பின்தொடர்வதில் இருந்துதான் தொடங்குவதாக, குமாரி கூறினார்.

Why police must be sensitised

Women make up 48.5% of India’s population, yet women comprised 8.98% of the police force as of January 1, 2019. None of the states in India have 33% women police as recommended and nine states will take over 50 years to achieve 33% women representation, IndiaSpend reported on November 7, 2019.

“All too often, women seeking justice face hostility or contempt from the very people who are supposed to uphold their rights,” said a 2011 United Nations report on women’s access to justice. “Police, court staff and other justice sector personnel typically reflect the discriminatory attitudes of wider society.”

Women in India are more likely to report robbery than sexual assault though the latter exceed in number, the report found.

There is a gender sensitivity deficit in how Indian police function, said Indian Police Service officer Sampat Meena in a project proposal submitted to the Bureau of Police Research and Development in 2016. “In the context of India, this is like a double jeopardy for Indian women,” said the document. “They suffer because of the prevailing social factors which see them in a particular value framework. They also suffer as victims when they interface with the police because of the masculinity subculture in police.”

சி.எச்.ஆர்.ஐ ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட டெல்லியில் உள்ள 2,700 குடும்பங்களில், 2.78% (75) குடும்பத்தில் ஒரு பெண் உறுப்பினர் முந்தைய ஆண்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார். மும்பையில் நேர்காணல் செய்யப்பட்ட 2,006 பேர் குடும்பங்களில் 1.94% (39) பேர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினர்.

மொத்தத்தில், டெல்லியில் இருந்து இதுபோன்ற 80, மும்பையில் இருந்து 45 வழக்குகள் உள்ளன. டெல்லியில், 74 சம்பவங்கள் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை - 52 பாதிக்கப்பட்டவர்கள் சட்ட வழக்கில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றனர். மும்பையில், 40 சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை - 26 வழக்குகளில் பதிலளித்தவர்கள், பதிலடி கொடுக்க அஞ்சுவதாகக் கூறினர்.

இக்கட்டுரை எழுதிய எங்கள் நிருபர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்; மேலும் ஏழு பெண்கள் (அவரது 648 பாலோயர்ஸ்) தாங்கள் சிலரால் பின்தொடரப்பட்டதாகவும், எனினும் இதுபற்றி போலீசில் தெரிவிக்கவில்லை எனவும் கூறினர்.

Source: Crime Victimisation and Safety Perception, 2015

சில நம்பிக்கைகள்

சி.ஆர்.ஐ ஆய்வு நான்கு பிரிவுகளில் பதிவான வழக்குகளை மட்டுமே பார்த்தது: மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள்; ஒரு மோசமான அல்லது அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து முறைத்துப் பார்த்தல்; பயப்படுதல் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் பின்தொடர்ந்து வருவது மற்றும் அநாகரீகமாக / தொட்டது / கிள்ளியது.

டெல்லியில் 68 வழக்குகளிலும், மும்பையில் 22 வழக்குகளிலும், மோசமான அல்லது விரும்பத்தகாத பாலியல் கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது. இரு நகரங்களிலும் தலா ஐந்து வழக்குகளில் பெண்கள் பயப்படுகிறார்கள் அல்லது சங்கடமாக இருக்கும் வரை ஆண்கள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். டெல்லியில் இந்த ஐந்து வழக்குகளில் ஒன்று மட்டுமே பதிவாகியுள்ளது, மும்பையில் எதுவும் பதிவாகவில்லை.

புகார் அளிக்கப்படும் வழக்குகளில் கூட, பல விசாரணைகள் நிலுவையில் உள்ளது, குறைவான குற்றச்சாட்டுகள் பதிவாவதற்கு வழிவகுக்கும். 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12,947 பின்தொடர்தல் வழக்குகள் விசாரணையில் உள்ளன (இதில் 9,438 புதிய வழக்குகள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இருந்து 3,505 வழக்குகள் நிலுவையில் உள்ளன) என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது. நான்கு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு (31.4%) வழக்குகள் 2018 இறுதியில் நிலுவையில் இருந்தன. பத்தில் ஒரு (10.7%) வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தீர்க்கப்பட்டன.

பெண்கள் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து புகாரளிப்பது கடினம் என்று டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும் பாலின ஆர்வலருமான தாரா நருலா கூறினார். "முதல் தடையாக இருப்பது செய்தி" நருலா கூறினார். "வழக்குகள் பதிவு செய்ய மறுக்க போலீசார் ஆயிரக்கணக்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். எஃப்.ஐ.ஆர் [முதல் தகவல் அறிக்கை] தாக்கல் செய்யப்படுமா இல்லையா என்பது மற்றொரு கேள்வி” என்றார்.

வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுப்பதில்லைஎன்று அவர் கூறினார். "அவர்கள் எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர் இன்னொரு நடைமுறைக்கு செல்ல வேண்டியிருக்கும்" என்று நருலா சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வழக்குகளுக்கான தண்டனை விகிதம் குறைவாக உள்ளது. 2018 இல் தீர்க்கப்பட்ட வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (29.6%) குறைவான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது என்று என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், 34.8% வழக்குகள் தண்டனைக்கு வழிவகுத்தன, அதன் பின்னர், விகிதம் 30% க்கும் குறைவாகவே உள்ளது என்று தரவு காட்டுகிறது.

அதிர்ச்சியை கையாள்வது

பின்தொடர்ந்து செல்லுதல் என்பது, பாதிக்கப்பட்டவர்களின் மன நலனில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மும்பையை சேர்ந்த உளவியலாளர் சாக்ஷி கவுர் ஹிரா, “பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே சண்டை அல்லது அமைதியான முறையில் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார்கள்” என்றார். “இது கவலை அதிகரிக்கும் மற்றும் பிற உடலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களையும் அவர்களின் முடிவுகளையும் இரண்டாவது முறையாக யூகிக்கத் தொடங்குகிறார்கள்" என்றார்.

"எனது உடைகள், எனது செயல்கள் மற்றும் நான் எடுக்கும் வழிகள் குறித்து நான் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன்," என்று ராஜஸ்தானின் ஆஜ்மீரை சேர்ந்த 25 வயது உளவியலாளர் கவிதா *, தனது அண்டை வீட்டு பையனால் தாக்கப்பட்டது குறித்து கூறினார். "நாங்கள் அதே குருத்வாராவுக்குச் செல்வது வழக்கம்; அவன் அங்கேயும் என்னைப் பின்தொடர்வான். இறுதியில், நான் குருத்வாராவுக்கு செல்வதை நிறுத்தினேன்” என்றார்.

இதுபோன்றவற்றால் பதட்டமடையும் கவலையடையும் பெற்றோர்கள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பார்கள் என்று கவலைப்படும் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, ஹிரா கூறினார். "பிறகு அவர்கள் இரட்டை வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

குருகிராமில் வசிக்கும் 26 வயது காஜல்*, ஒரு நண்பரின் நண்பரால் மூன்று வருடங்களுக்கும் மேலாகப் பின்தொடரப்பட்டார். ஆனால் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்பதற்காக இதை வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்திருந்தார். "நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினேன்; இதுபற்றி சொன்னால் , நான் கட்டுப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்" என்று கஜால் கூறினார். "மேலும், அவர் ஒரு அறிமுகமானவர் என்பதால், எனது கணிப்பு பற்றி என் பெற்றோர் கேள்வி எழுப்பியிருப்பார்கள்" என்றார்.

என்ன செய்ய வேண்டும்

இந்த பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம்; மேலும் அறிக்கையிடலை ஊக்குவிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வது குறித்து காவல்துறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும்; காவல் நிலையங்கள், எளிதில் பெண்கள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்என்றார்.

"பெண்களுக்கு உதவிச்செய்யும் பிரிவுகள் உள்ளன; ஆனால் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர்களை விரைவாக பதிவு செய்ய வேண்டும்," என்று நருலா கூறினார். “மேலும், சமூகத்தில் நனவின் கூட்டு மாற்றம் இருக்க வேண்டும். குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். பெரும்பாலும், விரக்தியடைந்த வேட்டைக்காரர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்க முடிகிறது, எனவே இந்த வழக்குகளை விரைவாகக் கையாள வேண்டும் என்று குமாரி கூறினார்.

"இந்த குற்றங்கள் குறித்து ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளிப்பதை சாத்தியமாக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஹிம்மத் போன்ற செயலிகள் சுட்டிக்காட்டி, ஒரு எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை எழுப்பவும், டெல்லியில் உள்ள காவல்துறையினருக்கு அறிவிக்கவும் உதவுகிறது.

(*பாதுகாப்பு கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.