விவசாய சந்தைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய வேளாண் சட்டங்கள், இத்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிவுபடுத்தக்கூடும் என்பதை, கடந்த காலத்தில் இருந்த இதேபோன்ற சட்டங்கள் பற்றிய நமது பகுப்பாய்வைக் காட்டுகிறது. அரசின் விலை உத்தரவாத முறையை பலவீனப்படுத்துவதன் மூலம், சட்டங்கள் சிறு மற்றும் ஏழை விவசாயிகளைத் துன்புறுத்துகின்றன, அவர்கள் 80% துறைசார்ந்தும், 23% வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களையும் உருவாக்குவதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த 1998ம் ஆண்டில் கரும்புத் தொழிற்துறையை தனியார்மயமாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் வாரியமான பீகார் மாநில வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), 2006 இல் விவசாய சந்தைகளுக்கான உரிமத்தடைகளை நீக்கியது. ஆனால், நாங்கள் பின்னர் விளக்குவது போல, இந்த தனியார்மயமாக்கல் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை - கரும்பு விவசாயிகள் இன்னும் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் நிலுவைத் தொகையை பெற போராடுகிறார்கள், பீகாரின் விவசாய உள்கட்டமைப்பு எந்தவொரு தனியார் முதலீட்டையும் காணவில்லை.

இந்தியா முழுவதும் இருந்து, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் மூலம், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது. அவர்களின் முதன்மை கோரிக்கை, சட்டரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தேவை என்பதாகும். மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏ.பி.எம்.சி மண்டிகளை (அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த சந்தைகள்) தாண்டி, விவசாய விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலைத் திறப்பதற்கும் அவர்களது முக்கியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் - இது, மண்டிகள் அழித்து சுரண்டப்படும் தனியாரை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கான விதிமுறைகளை அமைக்க அனுமதிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

நிறுவப்பட்ட மண்டி முறையை பலவீனப்படுத்துவது, அரசால் அமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட கொள்முதல் முறையை இது மேலும் பலவீனப்படுத்தக்கூடும் என்று, விவசாயிகள் வாதிடுகின்றனர். ஏனெனில் கோதுமை, அரிசி ஆகிய இரு பயிர்கள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நிறுவனங்களால் (மற்றும் எம்.எஸ்.பி இல்லை என்று அரசால் அறிவிக்கும் 21 பேரால்) வாங்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் சிறு விவசாயிகளை மிகவும் பாதிக்கும், ஏனெனில் அவர்களின் குறைந்த உற்பத்தியானது, பேரம் பேசும் திறனை அவர்களுக்கு அனுமதிக்காது. பெரிய விவசாயிகளை விட தங்கள் விளைபொருட்களுக்கு, சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்த விலையையே பெறுகிறார்கள். 2002-03 ஆம் ஆண்டில், மிகப்பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வருமானமானது, மிகச்சிறிய நிலம் வைத்திருப்பவர்களின் வருமானத்தைவிட, 2012-13 ஆம் ஆண்டில் ஏழு மடங்கிலிருந்து ஒன்பது மடங்காக உயர்ந்தது என்று 2015ம் ஆண்டு நபார்டு ஆய்வு காட்டுகிறது.

நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் உறுதியற்ற சந்தைகள் இல்லாதது இந்தியாவின் வேளாண் துயரத்திற்கான சில முக்கிய காரணங்கள் என்று, 2006ம் ஆண்டு சுவாமிநாதன் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. நில உடைமைகளில் பரவலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நிலச்சீர்திருத்தங்கள் இல்லாமல், புதிய சட்டங்கள் வருமான ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உதவாது.

இதற்கு நேர்மாறாக, பின்வரும் சிறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, 1978ம் ஆண்டு தொடங்கி சீனா தனது சந்தையை தாராளமயமாக்குவதில் இருந்து லாபம் ஈட்டியது: முதலில் வேளாண் பொருட்களின் மீதான கட்டுப்பாட்டைக் குறைப்பதன் மூலமும், ஒரே நேரத்தில் மற்ற வேளாண் உள்ளீட்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டைப் பராமரிப்பதன் மூலமும்; விவசாயிகளுக்கு நில உரிமைகளை மாற்றுவது; விலை மற்றும் சந்தைச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல்; மற்றும் கிராமப்புற கடன் கூட்டுறவு சங்கங்களை அமைத்தல்.

விவசாயிகளின் கவலைகள்

இந்த மூன்று சட்டங்களும் விவசாயத்தில் தடையில்லா வர்த்தகத்தை செயல்படுத்துவதையும், தங்களுக்கு விருப்பமான வாங்குபவர்களுடன் வர்த்தகம் செய்வதற்கு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். அந்த மூன்று சட்டங்கள்: உழவர் உற்பத்தி வர்த்தக மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம்-2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம்- 2020 ஆகியன.

புதிய சட்டங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை அதிகம் பாதிக்கின்றன, ஏனெனில் இந்த மாநிலங்களில் இருந்துதான் 65%-க்கும் அதிகமான கோதுமை (2019) குறைந்தபட்ச ஆதரவு விலையில், இந்திய முதன்மை நிறுவனமான இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் வாங்கப்படுகிறது. இந்த மாநிலங்களும் அவற்றின் விவசாயிகளும் தற்போதைய முறையில் இருந்து அதிக நன்மை பெறுகிறார்கள். (அரசு 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது, மற்றும் அரசு நிறுவனங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல்லை வாங்குகின்றன. பயறு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்து போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளது, ஆனால் அவை அரசு நிறுவனங்களால் வாங்கப்படுவதில்லை. பிற பயிர்களின் விலைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவை-விநியோக காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.)

ஏபிஎம்சி-எம்எஸ்பி மாதிரியில் விவசாயிகள்தான் புதிய சட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, தடைகளை அகற்றி - உறுதியான விலை, உரிமம் பெற்ற முகவர்கள் கையாள்வது மற்றும் மண்டிகள் சர்ச்சைக்கு தீர்வு காண்பது என்ற அனைத்து பாதுகாப்புகளும் தேவை என்பதாகும். சேமிப்பு மற்றும் மண் பரிசோதனை வசதிகள் போன்ற முக்கியமான சேவைகளையும் மண்டிகள் வழங்குகின்றன.

"குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் பெறப்பட்ட விலைகள் எப்போதுமே குறைவாகவே இருக்கும், ஏனெனில் விளைபொருள்கள் இடைத்தரகர்கள் அல்லது தனியாரால் விற்கப்படுகின்றன," என்று, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கடுகு, பயறு மற்றும் பிற காய்கறிகளை சாகுபடி செய்துள்ள, 54 வயதான ராஜேஷ் குமார் கூறினார். விவசாய சந்தைகளில் தனியார் துறை நுழைந்தவுடன், சிறு விவசாயிகளின் விலை தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட அறிவை வைத்து, எளிதில் சுரண்ட முடியும், என்றார்.

விவசாயத்தில் தடையற்ற சந்தை பல எண்ணிக்கையில் சிக்கலாக இருக்கும் என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளரான வி.எம். சிங் மேற்கோள் கூறினார். உதாரணமாக, ஒப்பந்த வேளாண் மாதிரியின் கீழ் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், தனியார் வாங்குபவர்கள் தரத்தில் நியாயமற்ற மற்றும் நம்பத்தகாத கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள், பெரும்பாலும் குறைவாகவே தொகை தருகிறார்கள் அல்லது தரமான பிரச்சினையை மேற்கொள்காட்டி ஒட்டுமொத்தமாக தவிர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். சிறுசிறிதாக நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் சிறு விவசாயிகளுக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர்ப்பதாக, சிங் கூறினார்.

மறுபுறம், ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் தனது 24 ஏக்கர் விவசாய நிலத்தில் காய்கறிகளை சாகுபடி செய்யும் 45 வயதான மனீஷ் பாண்டே போன்ற குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லாத பயிர்களை வளர்க்கும் விவசாயிகளும் உள்ளனர், இவர்களுக்கு புதிய சட்டங்கள் கொஞ்சம் அர்த்தம் தரும். அவர் தனது தயாரிப்புகளை பெருநிறுவன மற்றும் கூட்டுறவு வினியோகச் சங்கிலிகளான ரிலையன்ஸ், மதர் பால் மற்றும் உதான் அக்ரி போன்ற சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்கிறார். முந்தைய சட்டங்களின் கீழ், இந்நிறுவனங்கள் அவரது தயாரிப்புகளை வாங்குவதற்கு மண்டி உரிமத்தைப்பெற வேண்டியிருந்தது, ஆனால் புதிய வேளாண் சட்டங்களின் கீழ், அது தேவையில்லை.

இந்த மாற்றங்களை கார்ப்பரேட் பையர்கள் (வாங்குவோர்) வரவேற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக, சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, தோட்டக்கலை பயிர்களான யூகலிப்டஸ், சுபாபுல் மற்றும் காசுவாரினா போன்றவற்றில் இருந்து வரும் மரங்கள் மத்திய அரசால் 1-3% மண்டி வரிக்கு பொறுப்பாகும். இது, புதிய சட்டங்களின் கீழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. செஸ் மற்றும் கையாளுதல் / போக்குவரத்து செலவில் இந்த குறைப்பு -- வாங்குபவர்கள் இப்போது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தங்கள் சரக்குகளை பெறலாம் -- விவசாயிகளுக்கும் தொழில்களுக்கும் பயனளிக்கும் என்று, ஐ.டி.சி - பேப்பர்போர்டு மற்றும் சிறப்பு காகித பிரிவின் துணைத் தலைவர் சுனீல் பாண்டே தெரிவித்தார்; இவர், விவசாயிகளிடம் இருந்து தோட்ட மரங்களை சேகரித்து வாங்குகிறார்.

புதிய சட்டங்களை ஆதரிப்பவர்கள் நாடு முழுவதும் ஏபிஎம்சி-க்கள் மோசமாக இருப்பதாகக் கூறுகின்றனர், அவர்கள் 2013ம் ஆண்டில் அறுவடை செய்த நெல்லில் 13.5% மட்டுமே வாங்கியுள்ளனர், வேளாண் குடும்பங்களின் நிலைமைக்கான முக்கிய குறிகாட்டிகள் குறித்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (NSSO) கணக்கெடுப்பின் 70வது சுற்று தெரிவிக்கிறது. நாட்டின் அனைத்து விவசாயிகளில் 6% மட்டுமே கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றை நேரடியாக எந்த கொள்முதல் நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதன் மூலம் பெற்றதாக, 2012-13ம் ஆண்டில் எஃப்.சி.ஐ.யின் பங்கை மறுசீரமைத்தல் மற்றும் மறுவடிவமைத்தல் பற்றிய சாந்தா குமார் குழு அறிக்கையை குறிப்பிட்டது.

What the new laws say
Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 To promote barrier-free inter- and intra-state trade, beyond the premises of markets or mandis notified under state agricultural produce market legislations. The farmers can sell their produce to any person with a permanent account number (PAN) card, without any requirement of mandi license or certification, which otherwise was needed.
Promotes trading beyond the mandis.
The Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Act, 2020
To promote farmers' engagement with agri-business firms, processors, wholesalers and exporters.
Promotes contract farming
The Essential Commodities (Amendment) Act, 2020

To remove commodities like cereals, pulses, oilseeds, edible oils, onion and potatoes from the list of essential commodities.
Promotes foreign companies and foreign direct investment into agriculture.

சர்க்கரை: கடந்த காலத்திலிருந்து பாடங்கள்

இந்தியாவின் கரும்புத் தொழிலுக்கு 1998ம் ஆண்டில் உரிமம் தரப்பட்டது, இது தனியார் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிக்கவும், சாதகமான நிலைகளில் கூட குறைந்த உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் போன்ற குறைபாடுகளை சமாளிக்கவும் வழிவகுத்தது. விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கரும்பின் பங்களிப்பு 1990-1991 ஆம் ஆண்டில் சுமார் 5% இல் இருந்து 2010-2011 ஆம் ஆண்டில் 10% ஆக உயர்ந்துள்ளது, ஆனால் கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டால் விவசாயிகளின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படவில்லை. உற்பத்தித்திறன் நிலைகள் இன்னும் உகந்ததாக இல்லை: தற்போதைய சராசரி கரும்பு உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 70 டன் -- எடுத்தக்காட்டாக பிரேசில், கொலம்பியா மற்றும் சீனாவை விடக் குறைவு --மிகப்பெரிய புவியியல் மாறுபாடுகளுடன் உள்ளது, இது முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்பை விட்டுச் செல்கிறது.

கரும்பு விவசாயிகள் நல்ல விலை மற்றும் சரியான நேரத்தில் பணப்பட்டுவாடா வேண்டும் என்று நீண்டகாலமாக கிளர்ந்தெழுந்தனர். மேலும், பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தனியார் துறை சர்க்கரை ஆலைகளின் பங்களிப்பு இலாப நோக்கத்தால் குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சி ஆவணப்படுத்தியுள்ளது.

நியாயமான மற்றும் ஊதிய விலை (FRP) என்பது விவசாயிகள் தங்கள் பிராந்தியத்தின் கரும்பு கொள்முதல் நிறுவனத்திடம் இருந்து பெறும் குறைந்தபட்ச விலையாகும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் -- CACP இது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரைகளை வழங்கும் ஒரு அமைப்பு-- மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த விஷயத்தில், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், நியாயமான மற்றும் ஊதிய விலையை கணக்கிட்டு பரிந்துரைக்கின்றனர். இந்த விலையைத் தவிர, மாநில அரசுகள் மாநில ஆலோசனை விலையையும் (எஸ்ஏபி) அறிவிக்கின்றன. இது மிகவும் திறம்பட செயல்படவில்லை, மேலும் ஆலைகள் குறைந்த விலையில் தரமற்ற கரும்புகளை பெறுவதாக ஆலைகள் குற்றம்சாட்டப்பட்டன.

"ஆலைகளின் தனியார்மயமாக்கல் கரும்புக்கான சரியான விலையை எங்களுக்குப் பெறவில்லை. நியாயமான மற்றும் ஊதிய விலை உரிய இடத்தில் இருந்தாலும், எங்களுக்கு தாமதமாகவோ அல்லது குறைவாகவோ தொகை வழங்கப்படுகிறது," என்று, கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின், அமேதி கிராமத்தில் ஏழு ஏக்கர் கரும்பு நடவு செய்துள்ள தனது தந்தைக்கு உதவி செய்யும் 26 வயதான விபூதி நாராயண் கூறினார். நாராயணனடு கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகளின் முதன்மை வருமான ஆதாரமாக, கரும்பு உள்ளது.

பீகாரில் வர்த்தகர்களின் தயவு

விவசாய சந்தையை தாராளமயமாக்குவதற்கான அரசு தலைமையிலான முயற்சியாக, 2006ம் ஆண்டில் பீகாரில் ஏ.பி.எம்.சி.கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 2010ம் ஆண்டளவில், மாநிலத்தில் விவசாயிகள் தனியார் பையர்களிடம் (வாங்குபவர்) இருந்து அதிக பரிவர்த்தனை கட்டணங்களை எதிர்கொண்டனர் மற்றும் சரியான விலைகள் குறித்த தகவல்கள் இல்லாததால் அவதிப்பட்டனர் என்று மாநில அமைச்சர்கள் குழு, அந்த ஆண்டில் அறிக்கை அளித்தது.

கொள்முதல் லாபகரமானதாக இருக்கும்போது மட்டுமே வணிகங்கள் அதை மேற்கொள்ள முனைகின்றன என்று, பீகாரின் விவசாய சந்தைகளை தனியார்மயமாக்குவது ஏன் விவசாயிகளின் வருமானத்தை அல்லது மேம்பட்ட உள்கட்டமைப்பை அதிகரிக்கவில்லை என்பது குறித்து பத்திரிகையாளரும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் நிறுவனருமான பி. சாய்நாத், இந்த வீடியோவில் விளக்குகிறார்.

மாநிலத்தில் விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பை தனியார் துறை உருவாக்கவில்லை, காலப்போக்கில், தற்போதுள்ள பொதுத்துறை வசதிகள் மோசமடைந்துள்ளதாக, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் நவம்பர் 2019 அறிக்கை தெரிவிக்கிறது. இது, மண்டிகள் எண்ணிக்கை அடர்த்தியைக் குறைத்து, குறைந்த விலையை நிர்ணயிக்கும் தனியார் வர்த்தகர்களின் தயவில் விவசாயிகளை விட்டுச் சென்றது.

பீகாரின் வேளாண் செயலாக்கத் தொழில்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு, கிடங்குகள் இல்லை - எடுத்துக்காட்டாக, அவை குறைவாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளன. நிலையற்ற பயிர் விலைகள் மற்றும் பலவீனமான சந்தை கட்டமைப்பு காரணமாக, பயிர் பல்வகைப்படுத்தல் மோசமாக உள்ளது - மூன்று பயிர்கள் (நெல், கோதுமை மற்றும் மக்காச்சோளம்) மாநிலத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 70% க்கும் அதிகமாக உள்ளன.

பீகாரின் விவசாயம் குறித்த நிதி ஆயோக் பணிக்குழு அறிக்கை, 2015 இல் வெளியிடப்பட்டது, அதன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு மண்டிகளை ஒழிப்பதை ஒரு "தைரியமான" நடவடிக்கை என்று விவரித்தது, ஆனால் இது போதுமான குளிர் சேமிப்பு வசதிகளை அமைக்காமல் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இது தனியார் வாங்குபவர்களுக்கு விற்பதை விட சில வழிகளைக் கொண்டு இப்பகுதியில் உள்ள விவசாயிகளை விட்டுச் சென்றது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சந்தைகள் இல்லாத ஆறு மாநிலங்கள் சிறந்த விலை உணர்தலுக்கான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வேளாண்மை நிலைக்குழு (2018-19) பரிந்துரைத்தது. இதில் உள்ளீடுகள், இயந்திரங்கள் மற்றும் குளிர் சேமிப்புகள் ஆகியன அடங்கும்; சிறந்த வங்கி மற்றும் கடன் சேவைகள் மற்றும் விலை தகவல்; விவசாய வர்த்தகத்தை ஊக்குவிக்க சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள்; வானிலை புதுப்பிப்புகள் மற்றும் பலவும் அடங்கியுள்ளன.

வேளாண் சீர்திருத்தங்கள் எவ்வாறு சரியாக செய்ய முடியும்

வேளாண் சட்டங்களை அசோக் குலாட்டி போன்ற பொருளாதார வல்லுநர்கள் ஆதரித்துள்ளனர், இவர்கள் தங்களது துவக்கத்தை 1991ல் இந்திய பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலுடன் ஒப்பிட்டுள்ளனர், இது பொருளாதாரத்தை தனியார் துறைக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்து வைத்தது. போட்டி விவசாயிகளுக்கு அதிக சந்தை விருப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த அறிக்கையில் தாராளமயமாக்கல் அதிகரித்த ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளன. முதல் 1% இந்தியர்களின் வருமானத்தின் அதிகரிப்பு நாட்டின் வருமானக் குறியீட்டில் கீழ் 50% ஐ விட கணிசமாக அதிகமாகும். 1991ம் ஆண்டு முதல் 2012 வரை செல்வச்செறிவின் கூர்மையான அதிகரிப்பு, குறிப்பாக 2002 க்கு பிந்தையது குறித்து, Capital In The 21st century ஆசிரியரும் அறிஞருமான தாமஸ் பிகெட்டி கருத்து தெரிவித்தார்.

வேளான் துறையை ஒழுங்குபடுத்துவதில் இந்தியாவின் கடந்த கால அனுபவத்தில் இருந்து படிப்பினைகள் உள்ளன. "முதலீடுகள் சட்டத்தின் மாற்றத்தால் வரவில்லை, ஊக்கத்தொகை காரணமாக வருகின்றன," என்று, அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் வேளாண்மை மேலாண்மை மையத்தின் பேராசிரியரும் முன்னாள் தலைவருமான சுக்பால் சிங், நேர்காணலில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பீகார், சீர்திருத்தத்திற்கு பதிலாக சந்தையை மட்டுமே கட்டுப்படுத்தியது" என்றார். ஊக்கத்தொகைகளில் உள்கட்டமைப்பு மற்றும் துணை கொள்கைகள் அடங்கும், எடுத்துக்காட்டாக, சிறு விவசாயிகளுக்கு, விவசாயிகள் தயாரிப்பாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க உதவுகிறது மற்றும் ஒப்பந்த வேளாண்மை அல்லது நேரடி கொள்முதல் செய்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஈர்க்கும். சந்தைப் பொருளாதாரத்தில் விவசாயிகள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க, அவர்களுக்கு முன் தயாரிப்பு உள்ளீடுகள் (விதைகள், உரங்கள், கடன் மற்றும் இயந்திரங்கள் போன்றவை) அத்துடன், உற்பத்திக்கு பிந்தைய திரட்டல் (விவசாயிகள் தயாரிப்பாளர் அமைப்புகளின் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வது போன்றவை) பரவலாக கிடைக்க வேண்டும் என்று, அவர் மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.