மும்பை: கடந்த 1991இல் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின், 22 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 6.1 கோடி வேலைகளில், 92% அமைப்புசாரா பணிகள் என்று, 2011-12 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) 2014 தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

தாராளமயமாக்கல் இந்தியாவின் பெருமளவில் உள்ள அமைப்புசாரா விவசாயப் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது; விவசாயத்தில் இருந்து தொழிலாளர்கள் - மிகப்பெரிய பணியாளர்கள்- ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறைக்கு மாறினர். பணியிடங்கள் அளவை, அதாவது வேலை நேரம், பணியமர்த்தல், சங்கம், குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் பிற அம்சங்கள், அரசு விதிமுறைகள் அடிப்படையாகக் கொண்டு அமைப்பு மற்றும் அமைப்புசாரா பிரிவுகள் வேறுபடுகின்றன.

தாராளமயமாக்கல், வறுமை குறைதல் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் உயரும், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவற்றின் மூலம் உழைக்கும் தொழிலாளர்கள் சாதாரண தொழில்களை நோக்கி நகர செய்துள்ளன. ஆயினும் 2011-12 ஆம் ஆண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள அனைத்து வேலைகளின் 51% அமைப்புசாராதவை என்று தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 1999-2000இல் 34.128 கோடி என்றிருந்த முறைசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2011-12ஆம் ஆண்டில் 38.602 கோடி என்று அதிகரித்தது; இது, 13 ஆண்டுகளில் 13% அதிகரிப்பாகும். அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 81.5% ஆக உயர்ந்து, 2.046 கோடியில் இருந்து 3.715 கோடியாக , அதிகரித்துள்ளது.

எனினும்,1999-2000 இல் மொத்த பணியாளர்களில் அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் 6% இருந்தது, 2011-12 ஆம் ஆண்டில் வெறும் 9% மட்டுமே அதிகரித்தது. அமைப்புசார்ந்த துறையில் உருவாக்கப்பட்ட வேலைகள், குறைந்த வருவாய் கொண்ட அல்லது சமூக பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களின் பணியான அமைப்புசாராதவை என்று காட்டுகிறது.

இந்த போக்கு தொடர்வதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. டெல்லியில் உள்ள பொருளாதார கொள்கை சிந்தனைக் குழுவான ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர். (ICRIER) 2019 ஜனவரியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி துறையில் மொத்த வேலைவாய்ப்பு, 2015-16 வரையிலான 15 ஆண்டுகளில் 78% அதிகரித்து 1.37 கோடியாக இருந்தது; மொத்த வேலைவாய்ப்பில் ஒப்பந்த தொழிலாளர் பங்கு 15.5% இல் இருந்து 27.9% ஆக அதிகரித்துள்ளது என, மார்ச் 28, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. 8.3 சதவிகிதத்தில், ஒப்பந்த வேலைவாய்ப்பின் சராசரி வளர்ச்சி வீதம், வழக்கமான வேலையை விட 5 சதவிகிதம் அதிகம்.

உற்பத்தி நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும், நேரடியாகவும் முறைசாரா தொழிலாளர்களை நிரந்தரமாக பணி அமர்த்துவதாக, என, ஒரு பன்னாட்டு உற்பத்தியாளர் மண்டலமான ராஜஸ்தானின் ஆல்வார் நகரில் தொழிலாளர் மேலாண்மை தளத்தில் இருந்து கள நிலவரங்களை, மார்ச் 28, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இத்தகைய தொழிலாளர்கள் குறைவான ஊதியம், மோசமான பணிச்சூழல், குறைந்த வேலை பாதுகாப்பை பெற்றுள்ளது எங்களது விசாரணைகளில் தெரிய வந்தன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் உலக வேலைவாய்ப்பு சம்மேளனம் அமைப்புசாரா வேலைவாய்ப்பு, சாதாரண வேலைகளில் தொழிலாளர்கள் வழங்கிய சமூகப் பாதுகாப்பு இல்லாமல் இத்தகைய வேலைகளில் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும், குறைந்த வாழ்க்கைத் தரத்தை கொண்டிருப்பதையும் ஒரு அடையாளமாகக் காட்டியுள்ளது.

மறுபுறம், சில பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வேலை இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு வேலை செய்து சம்பாதிக்கலாம்.

இக்கட்டுரையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை பற்றிய எங்கள் விசாரணை தொடர்கிறது. எங்களது தற்போதைய விசாரணையின் பிற கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

மேலும் அமைப்புசாரா வேலைகள்

கடந்த 2012 இல் அமைப்புசாரா துறை தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள், சொத்து அடிப்படையாக கொண்டு சுய தொழில் செய்பவர்களாகவும்; ஏறத்தாழ 30% பேர் தற்காலிக ஊதியம் பெறும் தற்காலிக தொழிலாளர்களுமாக இருந்தாக, இந்தியா முழுவதும் உள்ள அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் பற்றி ஆய்வு நடத்திய, கொல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய 2018 ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 18% பேர் வழக்கமான தொழிலாளர்கள், அதில் 8% க்கும் குறைவானவர்கள்,சமூக பாதுகாப்புடன் கூடிய முழு நேர வேலைவாய்ப்பு கொண்டிருந்தனர்.

கடத 2003இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய தொழிலாளர் புள்ளியியலாளர்களின் 17வது சர்வதேச மாநாடு, அமைப்புசாரா வேலைகளை கீழ்கண்டவாறு வரையறுக்கிறது, "...வேலைவாய்ப்பு உறவு சட்டம் அல்லது நடைமுறையில், தேசிய தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல; வருமான வரிவிதிப்பு, சமூக பாதுகாப்பு அல்லது சில வேலைவாய்ப்பு நலன்களுக்கான உரிமை (நீக்கம், முன்கூட்டியே ஊதியம், வருடாந்திர அல்லது மருத்துவ விடுப்பு முதலியன) கொண்டிருக்கிறது".

Source: Azim Premji University, State Of Working India, 2018

அமைப்புசார்ந்த துறை மற்றும் அமைப்புசாரா துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலை இருக்க முடியும்; அதேபோல், ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புசாரா துறைகளில் அமைப்புசார்ந்த முறையான வேலை. என்.எஸ்.எஸ்.ஓ. (NSSO) தரவுகளின்படிஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு 2004-05 மற்றும் 2009-10 இடையே 8.4% அதிகரித்துள்ளது. ஆனால் இந்த துறையில் முறைசாரா வேலைவாய்ப்பு பங்கு, 1999-2000 ஆம் ஆண்டில் 32% ஆகவு, 2004-05 இல் 54% ஆகவும், 2011-12ஆம் ஆண்டில் 67%ஆகவும் அதிகரித்து இருந்தது.

ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் இரண்டில் தொழிலாளர் எண்ணிக்கை பெருகுவது, அமைப்புசாரா வேலைவாய்ப்பில் தொழிலாளர்களின் உயர்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, ஏப்ரல் 2018இல் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், வர்த்தக ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அமைப்புசார்ந்த துறையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சதவீதம் 1999இல் 38% இருந்து 2011-12 இல் 51% அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறின.

1999-2000 இல் இருந்து 2011-12 வரை முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் தகவல்தொடர்பு துறையில் அதிகரித்தல்

Sources: National Sample Survey, 1999-2011

கடந்த 1991 மற்றும் 2012 க்கு இடையே சேவைத்துறை 6.1 கோடி வேலைகள் என்று பங்களித்திருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை அமைப்புசாரா இயல்பை கொண்டவை. 2011-12 ஆம் ஆண்டில் சேவை துறையில் பணியாற்றிய 12.73 கோடி பேரில் 80% முறைசாரா தொழிலாளர்களாக இருந்தனர்.

Sector-Wise Breakup Of Informal Workers, 2004-2011
Year/ Sector Organised Sector Unorganised Sector Total
2004-05
Formal Informal Formal Informal Formal Informal
Agriculture 0.2 4.1 0.1 264.2 0.3 268.2
Manufacturing 5 10.3 0.6 38 5.6 48.3
Non-manufacturing 2 7.2 0.1 20.1 2.1 27.3
Services 19.5 10 1.1 76.8 20.6 86.7
Total 26.7 31.5 1.9 399 28.6 430.5
2009-10
Agriculture 0.3 13 0 231.5 0.4 244.5
Manufacturing 5.3 11.1 0 33.9 5.7 45
Non-manufacturing 2.5 15.8 0.4 29.6 2.9 45.4
Services 22.7 13.5 1.4 78.7 24.1 92.2
Total 30.9 53.5 2.3 373.7 33.1 427.1
2011-12
Agriculture 0.5 17.7 0 213.6 0.6 231.3
Manufacturing 6 15 0 38.7 6.5 53.3
Non-manufacturing 3 20 0 32.7 2.9 52.3
Services 24.2 16.1 1 85.8 25.4 101.9
Total 34 68 2 370.8 35.4 438.9

Source: National Institute of Labour Economics Research, 2014
Note: Figures in million

வேலைவாய்ப்பு தருவதில் விவசாயத்தின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதன் பங்கு 2004-05ஆம் ஆண்டில் 58% என்பது, 2011-12 இல் 49% ஆக குறைக்கப்பட்டது. இங்கே வேலைவாய்ப்பில் பெரும்பாலானவை இயற்கயில் இயல்பற்றவை; அமைப்புசாரா தொழில் திறன் அதிகரித்து வருகிறது.

மொத்த வேலைவாய்ப்பின் உற்பத்தித்துறையின் பங்கு 2004-05-ல் 12% ஆக இருந்தது, 2011-12இல் 13% ஆக அதிகரித்தது.

சேவைத் துறை 2004-05 ஆம் ஆண்டில் 10.73 கோடியில் இருந்து 12.73 கோடியாக அதிகரித்தது (19% அதிகரிப்பு); ஆனால் முறைசாரா வேலைகள் 80% ஆகும்.

முறைசாரா வேலைகளில் அதிக பெண் தொழிலாளர்கள்

கடந்த 1999-2000 ஆண்டுகளில் 25.2 கோடி ஆண்கள் மற்றும் 11.8 கோடி பெண் தொழிலாளர்கள் என, முறைசாரா தொழிலாளர்களில் பாலினம் வாரியாக உள்ள பிளவை காட்டுகிறது. இது 2009-10 ஆம் ஆண்டில் 27 கோடி ஆண் தொழிலாளர்களை அதிகரித்துள்ளது. ஆனால் பெண் தொழிலாளர்கள் இதே காலப்பகுதியில் 10.8 கோடியாக குறைத்துள்ளது. இது பெண் ஊழியர்களுக்கான வழக்கமான சம்பள வேலைகளில் குறைந்துள்ளது;1983 முதல் 2011-12 வரை சுயதொழில், தற்செயல் பணிகள் அதிகரித்தன.

பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் மூலம் எடுக்கப்பட்ட வேலை வகை

Source: India’s Informal Employment in the Era of Globalization: Trend and Challenges, IOSR Journal Of Business Management, April 2018

பெண் முறைசாரா தொழிலாளர்கள் முக்கியமாக விவசாயம், வணிக, ஹோட்டல், உணவகங்கள், சமூகம், சமூக தனிப்பட்ட, சேவைகள் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி சர்வேயின் 68ஆவது சுற்று (2011-12) முடிவுகள், ஆண்களில் (48%) விட சுய தொழிலாளர்கள் விகிதம் பெண்களில் (நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தில் 51.2%) அதிகமாக இருந்ததை காட்டியது. வழக்கமான ஊதியம் / ஊதியம் பெறும் ஊழியர்கள் கிராமப்புற பகுதிகளில் ஒப்பிடுகையில், நகர்ப்புற தொழிலாளர் தொகுப்பில் அதிக விகிதம் (43.6%) கொண்டுள்ளனர்.

நகர்ப்புற பெண்கள் மத்தியில் 57.1% ஒப்பிடும்போது, கிராமப்புற பெண் தொழிலாளர் (94.4%), சாதாரண (அமைப்புசாரா) உழைப்புடன் சுய வேலைவாய்ப்பின் விகிதம் அதிகமாக உள்ளதையும்; நகர்ப்புற ஆண்களில் 56.1% மற்றும் கிராமப்புற ஆண்கள் 90% என்று இருப்பதையும் இது தெளிவாக்குகிறது.

எனவே, 1983 ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு மற்றும் பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்தாலும், அவை பெரும்பாலும் அமைப்புசாராதவை; "பணியிடத்தை தற்காலிகமாக அதிகரிப்பது" என்பதை இது காட்டுவதாக, கொல்கத்த பல்கலைக்கழகத்தின் 2018 ஆய்வு கூறுகிறது.

தற்செயலான வேலைவாய்ப்பின் மொத்த வீழ்ச்சி மற்றும் நகர்ப்புற பெண்களின் வழக்கமான வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது ஒரு உறுதியான வளர்ச்சி என்று, கொல்கத்தாவின் சாருசந்த்ரா கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு ய்வு தெரிவிக்கிறது.

கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 92.2% பங்காகவே தற்காலிக உழைப்புடன் சேர்ந்து சுய வேலைவாய்ப்பு இருந்தது.

ஏன் அமைப்புசாரா வேலைகள்?

ஒழுங்கமைக்கப்பட்ட சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் முறையான துறையில் நுழையவதை தடுக்கும் சாதாரண கல்வி மற்றும் பிற தடைகளை அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் உழைக்கும் இந்தியா-2018 (The State of Working India 2018) ஆய்வு முறையானது குறிக்கவில்லை.

சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் 2018 ஆய்வுப்படி, உற்பத்தியில் அமைப்புசாராமை அதிகரிக்க இரு காரணங்கள் உள்ளன:முதலாவதாக, பெருமளவிலான சிறிய அலகுகளிலிருந்து உற்பத்தியைப் பரப்புவதன் காரணமாக; மற்றும் இரண்டாவது, ஒரு ஒழுங்குபடுத்தப்படாத ஊழியர்களின் குறைவான விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒப்பந்தம் (அல்லது அமைப்புசாரா) தொழிலாளர்களை நியமிக்கும் முறையோ அல்லது முறையான தொழிலாளரின் பேரம் பேசும் சக்தியை ஒட்டுமொத்தமாக ஊதியங்களை அடக்குவதாகும்.

உற்பத்தியாளர்கள் தங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு, அதிக ஊதியங்களை முறைசாரா தொழிலாளர்களுக்கு செலுத்துவதன் மூலம், அதிகரித்த இறக்குமதி போட்டி மேலும் தொழில்துறை தொழிற்பாட்டின் அறிவிப்புக்கு வழிவகுத்துள்ளது; மற்றும் உழைப்பு நலன்கள் மீதான செலவினங்கள் மூலம் சேமிப்பதற்கும் என்று, 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.