காங்கிரசின் வருவாய் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமே; ஆனால் சமூக செலவினங்களை மாற்றக்கூடாது

Update: 2019-04-01 00:30 GMT

பெங்களூரு: பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க. ) அரசு அறிவித்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10% இட ஒதுக்கீட்டை "செல்வந்தர்களால் கைப்பற்றலாம்"; அதேநேரம் “ஆட்டத்தை மாற்றக்கூடிய’ காங்கிரஸ் கட்சி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம், இந்தியாவில் தற்போது குறைவாக உள்ள சமூக செலவினங்களில் வரவில்லை என, The World Inequality Lab என்ற ஆராய்ச்சி அமைப்பின் புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை அதிக அளவில் உள்ளது மற்றும் அடுத்த அரசு இப்பிரச்சினையை தீவிரமாக தீர்க்க வேண்டும்; “இப்போது வரை இருந்ததை போல் வெறும் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது” என, The World Inequality Lab இணை இயக்குனர் லூகாஸ் சான்செல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 1980களில் இருந்து, 0.1% வருமானம் ஈட்டுவோர் கைப்பற்றிய மொத்த வளர்ச்சியானது , இந்திய மக்கள் தொகையில் கீழேயுள்ள 50% பேரின் மொத்த வளர்ச்சியை விட (12% vs 11%) அதிகம். மக்கள்தொகையில் நடுத்தர 40% பேரை (29% vs 23%) விட, மொத்த வளர்ச்சியின் பங்கை முதல் 1% பேர் பெறுவதாக அறிக்கை கூறுகிறது.

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியன, ஏழை மக்களுக்கு உதவுவதாக 2019 பொதுத் தேர்தலை ஒட்டி அளித்திருக்கும் வாக்குறுதியை இது ஒப்பிடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ந்யூந்தம் ஆயோ யோஜனா (NYAY அல்லது குறைந்தபட்ச வருவாய் திட்டம்) மார்ச் 25, 2019 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவின் 20% உள்ள வறிய குடும்பத்தினருக்கு (இது 5 கோடி குடும்பங்கள் அல்லது 25 கோடி மக்கள் என மதிப்பிடப்படுகிறது) மாதம் ரூ 6,000 வீதம் வழங்கி மாத வருவாயை ரூ.12,000 (ஆண்டுக்கு ரூ.72,000) என உயர்த்துவதாகும்.

பா.ஜ.க. அரசு, 2019 ஜனவரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளுக்கு அரசு வேலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு தர அரசியலமைப்பின் 124வது திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது என, 2019 ஜனவரி 14இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

காங்கிரஸின் குறைந்தபட்ச வருமான திட்டம் வேலை செய்யும்

"காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய்" திட்டம் தேர்தல் கள விளையாட்டை மாற்றக்கூடியது" ஆனால் அது சமூகச் செலவுகளை குறைத்துக்கொள்வதாக இருக்கக்கூடாது என சான்செல் கூறினார்.

எளிய திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 72,000 என்ற குறைந்தபட்ச வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகவும் மற்றும் கீழ்மட்டத்தில் உள்ள குடும்பங்களில் 33 சதவீதத்திற்கு மேல் பலன் தரும் என்று அறிக்கை கூறுகிறது. இது, ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருவாய் என அமைக்கப்பட்டிருந்தால், அடிமட்டத்தில் உள்ள 48% குடும்பங்கள் பயன்பெறும்; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% செலவாகும்.

"ஒருவேளை குறைந்தபட்ச வருவாய் திட்டம் சமுதாயத்தின் வறிய பிரிவுகளின் வாழ்க்கை தரத்தில் கணிசமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும்" என அறிக்கை கூறுகிறது.

வருமானம் மற்றும் சொத்தின் மீதான "அதிக வெளிப்படைத்தன்மையின்" அவசியத்திய வலியுறுத்தும் இந்த அறிக்கை, கல்வி மற்றும் சுகாதார மீதான சமூகநலச் செலவுகளில் கூடுதலாக குறைந்தபட்ச வருமானம் இருக்க வேண்டும் என்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு "ஒரு அரசியல் ஸ்டண்ட்"

பாரதிய ஜனதா அறிவித்துள்ள 10% இட ஒதுக்கீட்டு அளவுகோலானது, ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக, 5 ஏக்கருக்குக் குறைவான விவசாய நிலம் ( மூன்று கால்பந்து மைதான அளவு), 1,000 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு வீடுகள் அல்லது 900 சதுர அடிக்கும் குறைவான அடுக்ககம் (அறிவிக்கப்பட்ட நகராட்சி பகுதி) அல்லது 1,800 சதுர அடிக்கும் (அறிவிக்கப்படாத நகராட்சி பகுதி) குறைவாக இருக்க வேண்டும்.

Source: Tackling Inequality In India Is The 2019 Election Campaign Up To The Challenge? ( World Inequality Lab: March, 2019)
குறிப்பு: இந்தியாவில் 93% குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிக்கின்றன. இது பெயரளவு வளர்ச்சி விகிதத்தை பயன்படுத்தி 2020 அளவை அடிப்படையாக கொண்டது.

ஆரம்ப நிலை அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

  • 93% குடும்பங்கள், வருமான வரம்பை அடிப்படையாக கொண்ட வருவாய்க்கு தகுதி பெற்றுள்ளன
  • 96 % குடும்பங்கள் விவசாய நிலம் என்ற அடிப்படையில் தகுதியுடையவை
  • 80% குடும்பங்கள் குடியிருப்பு இல்லத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளன
  • 73% மக்கள் நகர்ப்புறங்களில் தகுதியுடையவர்கள் 900 சதுர அடி குடியிருப்புக்கும் குறைவாக இருப்பதால்

"வருவாய் குறைந்த 50% குடும்பங்களை இலக்காகக் கொண்டு, அகில இந்திய அளவில் ரூ.2,00,000 என்று மதிப்பிடுவதன் மூலம் அடைய முடியும்" என்று அறிக்கை கூறுகிறது.

தற்போதைய தொடக்க நிலை "சமுதாயத்தின் செல்வந்த பிரிவுகளுக்கு ஆதரவாக உள்ளது", அத்தகைய கட்டமைப்பானது, "உண்மையிலேயே சமூகநீதி கோரிய ஒரு சீர்திருத்தத்தை விட ஒரு அரசியல் நாடகம் போல தோன்றுகிறது" என்கிறது அறிக்கை.

விவசாய நிலங்களை அடிப்படையாக கொண்ட 50% அடித்தட்டு மக்களை, (அல்லது விவசாய நிலம் இல்லாத குடும்பங்கள்) சென்றடைய, அகில இந்திய அளவில் தொடக்க நிலையானது பூஜ்ஜியம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற பகுதிகளில், "ஆரம்ப நிலையானது கிராமப்புற பகுதிகளில் ஒரு குடியிருப்புடன் இணைக்கப்பட வேண்டும், மேலும் 0.4 ஏக்கரில் அமைக்கப்பட வேண்டும்" என்று அறிக்கை தெரிவிக்கிறது.

வீட்டின் அமைப்பு அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு, 50% கிராமப்புற பகுதிகளில் 500 சதுர அடி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 200 சதுர அடி அளவு குறைக்கப்பட வேண்டும் என்பதிய இலக்காகக் கொள்ளலாம். கட்டுமானப்பகுதி "கட்டிட மதிப்பு மற்றும் மோசமான பதிலி காரணமாக, பொருளாதார பின் தங்கிய பிரிவினருக்கான நிலையும் மோசமான பதிலியாக உள்ளது”. ஏனென்றால் சிறிய கட்டிடப் பகுதி அவசியமாக குறைந்த கட்டிட மதிப்பை குறிக்கவில்லை, குறிப்பாக நகர்ப்புறங்களில். ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு (நிலம் + கட்டிடம்) சுமார் 7 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும் என்பது, வறிய 50% குடும்பங்களை இலக்காகக் கொண்டது. இந்த மதிப்புக்கு மேலே சொத்து உள்ள குடும்பங்கள் தானாக ஒதுக்கீடு நன்மைகளில் இருந்து விலக்கப்பட வேண்டும்.

ரூ 7 லட்சம் விலை என்பது, 2017 ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு செல்வந்த குழுக்களில் சொத்தின் அதே அளவு அதிகரித்துள்ளது.

கூடுதல் சமூகச் செலவு, முற்போக்கான வரிவிதிப்பு

இதுவரை, சமூக இடமாற்றம் குறித்த பிரச்சினை அரசியல், தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக கூறும் அறிக்கை, சுகாதார மற்றும் கல்வி பற்றிய இந்திய செலவினங்களை அதிகரிப்பது அவசியம் என்று மேலும் கூறுகிறது.

வருமானம், செல்வம் மற்றும் வரி தரவுகளை ஆய்வு செய்தால், வருவாய் மற்றும் சொத்து மீதான முற்போக்கான வரிகள் மூலம் சமூக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்கிறது. "மிக உயர்ந்த சமத்துவமின்மை, சமூக மற்றும் சமூக நலன்களை கீழ்மட்ட மற்றும் நடுத்தர வருவாய் குழுக்களுக்கு நிதியளித்தல்" பிரச்சனைகளை இது தீர்க்கும் என்று அது கூறுகிறது.

"எளிமையான அனுமானங்களின் கீழ், நாம் கண்டறிந்தது, 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட வீடுகளில் மொத்த சொத்துக்களை 2% வரி (இது குடும்பங்களில் முதல் 0.1%) , மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2,30,000 கோடி அல்லது 1.1% விளைவிக்கும், "என்று கூறும் அறிக்கை" 99.9% குடும்பங்கள் அத்தகைய வரிகளால் கவலைப்படவில்லை " என்கிறது.

ரூ. 2 கோடிக்கு மேல் நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான 2% மாற்று வரி 2,60,000 கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2%) விளைவிக்கும்; இது 1% குடும்பங்களை மட்டுமே பாதிக்கும். காங்கிரஸ் கட்சி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் ரூ 72,000 என்பதற்கான செலவினத்தை இது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஈடுகட்ட முடியும் என்று அறிக்கை மதிப்பீடு தெரிவிக்கிறது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.